செவ்வாய், 3 ஜனவரி, 2012

இலக்கிய ஆர்வம் நிறைய இருக்கிறது. ஆனால் அதை எப்படி வெளிக்காட்டுவது என்று சிந்தித்த வேளையில், சட்டென உதித்தது தான் இந்த ப்ளாக் ஐடியா ! அது சரி ..... எப்படி தொடங்குவது ? 
என்றோ  பள்ளியில் படித்த ஒரு பாரதிதாசன் கவிதை நினைவுக்கு வருகிறது .

நீல வான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை 
கோலம் முழுதும் கட்டிவிட்டால் காதல்  கொள்ளையிலே  இவ்வுலகம் சாமோ?
வானச்சோலையிலே பூத்த தனி பூவோ? நீதான் சொக்க வெள்ளி  பாற்குடமோ ?
காலைவந்த செம்பரிதி  கடலில் முழ்கி , கனல்  மாறி  குளிரடைந்த ஒளிப்பிழம்போ காண்

 நான் மிகவும் ரசித்து மனனம் செய்த பாடல் . நிலவை பெண்ணாக நினைத்து வர்ணித்த இந்த கவிஞனின் கற்பனை வளம் தன என்னே ?